கத்தரிக்காய் உண்பதனை தவிர்க்க வேண்டியவர்கள்

பெரும்பாலானவர்கள் கத்தரிக்காயை விரும்பி சாப்பிட மாட்டார்கள், ஆனால் அதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட கத்தரிக்காயில் சாப்பிட்டால், எடை அதிகரிப்பு என்ற பிரச்சனையே இருக்காது, காரணம் இதில் கலோரிகள் குறைவு.

கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
நைட்ஷேட் (சோலனேசி) குடும்பத்தில் உள்ள காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்றாகும். மற்ற நைட்ஷேட் காய்கறிகளில் தக்காளி, பெல் பெப்பர்ஸ் மற்றும் பல்வேறு வகையான உருளைக்கிழங்கு ஆகியவை அடங்கும்.

நைட்ஷேட் காய்கறிகள் சிலருக்கு செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றன.

நைட்ஷேட் காய்கறிகளில் ஆக்சாலிக் அமிலம் அதிகமாக உள்ளது, இது சிலருக்கு சிறுநீரக கற்கள் மற்றும் கீல்வாதம் உருவாவதற்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது.

ஏற்கனவே இந்த நோயால் அவதிப்படுபவர்கள், கத்தரிக்காய் உட்பட பிற நைட்ஷேட் காய்கறிகளை தவிர்ப்பது நல்லது.