வெள்ளை உடையில் தேவதை போல மின்னும் முல்லை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இதில் மீனா – ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)


இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்து இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.