பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் தீவிர முயற்சியில் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் பெட்ரோல் விநியோகிக்க தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எரிபொருள் தட்டுப்பாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 200 இராணுவ ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இருப்பினும் கிறிஸ்துமஸ் வரை பொருட்களின் பற்றாக்குறை நீடிக்கும் என பிரித்தானியா கருவூலத்தலைவர் ரிஷி சுனக் (Rishi Sunak) எச்சரித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) மெயில் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில்,
இந்த விநியோக பிரச்சனைகள் உலகளாவியது என்றும் பிரித்தானிய அரசால் மட்டும் இதை சரிசெய்ய முடியாது என்றும் அவர் கூறுகிறார். அத்துடன் “இந்த பற்றாக்குறைகள் மிகவும் உண்மையானவை தான், ஆனால் இது இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் விநியோகச் சங்கிலிகளில் உண்மையான இடையூறுகளை நாங்கள் காண்கிறோம்.
இந்நிலையில் எங்களால் முடிந்தவரை இதைத் தணிக்க எங்களால் முடிந்ததைச் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார். உயர்ந்து வரும் இந்த பணவீக்கம் பிரித்தானியாவின் மில்லியன் கணக்கான குடும்பங்களை ‘சவாலான’ குளிர்காலத்தை எதிர்கொள்ள வைக்கும் என்பதையும் அவர் இதன்போது ஒப்புக்கொள்கிறார்.
எரிசக்தி, எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் சிக்கல்களை உள்ளடக்கிய, ‘EFFing நெருக்கடி’ என்று சில அமைச்சர்கள் விவரித்த போதிலும், பொருளாதார மீட்பு குறித்து ரிஷி சுனக் (Rishi Sunak) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.