யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படலாம் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்திப் பரிபாலர்களுடன் இன்று இடம்பெற்ற வழியினூடான கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே இவ்வாறு அறிவித்துள்ளார். குறிப்பிட்ட கலந்துரையாடலின் போது,சமுர்த்தி திட்டடத்தின் வாயிலாக சுமார் 2 லட்சக் குடும்பங்களின் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது.
மேலும் யாழின் கடற்றொழில் திட்டம் தொடச்சார்பாக கலந்துரையாடப்பட்டது. இதன் ஊடாக யால மாவட்டத்தில் கடற்றொழில்சார் குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக சுமார் 4 கோடி 57 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாளர்களாக யால மாவதின் 14 பிரதேச பிரிவுகளில் 933 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்தார்.
திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் படகு இயந்திரம், ஐஸ் பெட்டி, ஜிபிஎஸ் உபகரணம், வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான துவிச்சக்கர வண்டி போன்ற தொழில் உபகரணங்களை கோருகின்ற போதிலும், பெரும்பாலான பயனாளர்கள் வலைகளை கேட்டுள்ளதாகவும், கொள்வனவு செய்வதற்கான ஒழுங்கு முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதேச செயலாளர்கள், ஒரு பகுதி நிதி மட்டுமே தற்போது கிடைத்துள்ள நிலையில் முழுமையான நிதி கிடைத்ததும் தெரிவு செய்யப்பட்ட அனைவரது எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற முடியும் எனவும் தெரிவித்னர்.
இதன் முதற்கட்டமாக ஒரு கோடி 50 லட்ச ரூபாயை அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டகாக யாழ் மாவட்ட சமுத்திரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது, தெரிவு செய்யப்பட்ட பயனாளர்கள் வலைகளை பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருவதால் அதிகபடியான வலைகளை கொள்வனவு செய்ய இது குறித்து வடக்கடல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தபோதும் கடந்த அரசாங்க காலத்தில் வடக்கடல் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்ட வலையின் தரம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தற்போது கொள்வனவு செய்யப்படும் வலைகளின் தரம் குறித்து ஆராயப்பட வேண்டும் தெரிவித்தார்.
மேலும் கடற்றொழில்சார் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதிகளை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஏனைய திட்டங்கள் குறித்து விரைவில் விரிவாகப் கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.