சீனாவில் கடந்த 7 ஆண்டுகளாக முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த 15 குடியிருப்பு கட்டிடங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் குண்டு வைத்து தகர்த்தப்பட்டுள்ளன. யுனான் குன்மிங் பகுதியில் இருந்த இந்த கட்டிடங்கள் அனைத்தும் 45 வினாடிகளில் தரைமட்டகமாக்கப்பட்டன.
154 மில்லியன் டொலர் பெறுமதியான கட்டிடங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை இவ்வாறு சீனாவில் ஒரே நேரத்தில் பல கட்டிடங்கள் குண்டு வைத்து தரைமட்டமாக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
இதன்போது 4.6 டொன் வெடிப்பொருட்களை கட்டிடத்தின் 85 ஆயிரம் இடங்களில் வைத்து வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டபோது போது குறித்த பிரதேசத்தில் இருந்து இரண்டாயிரம் குடும்பங்களைச் சேரந்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு 340 ஏக்கர் நிலப்பரப்பில் சீனாவில் உள்ள நிறுவனமொன்றால் இந்த கட்டிடங்களை கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் குறித்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட மூலதன பிரச்சினையாலும் வேறுபல காரணங்களாலும் இந்த கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.