உலகின் மிகச்சிறந்த புகைப்படம்

மத்திய ஆப்பிரிக்காவின் குடியரசில் இங்கிலாந்தின் அனுப் ஷா என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட பாட்டம் பூச்சி சூழ அதன் நடுவே நின்ற கொரில்லாவின் புகைப்படம் ‘தி நேச்சர் கன்சர்வன்சி – 2021’ன் உலக புகைப்பட போட்டியில் உயர்ந்த விருதினை வென்றுள்ளது.

கொரோனா நெருக்கடி தாமதங்களுக்கு பிறகு ‘தி நேச்சர் கன்சர்வன்சி’ அமைப்பு நடத்திய உலகளாவிய புகைப்பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பானது 72 நாடுகளில் இயங்கும் உலகளாவிய இயற்கை பாதுகாப்பு அமைப்பாகும், ஆண்டுதோறும் இந்த அமைப்பு புகைப்பட பொடியை நடத்தும். இதில் 158 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்கள் இடம்பெற்றன.

இதில் உயர்ந்த விருதினை வென்ற இந்த புகைப்படமானது மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள பாங்கா ஹோகோ, ஜங்கா-சங்கா எனும் அடர்ந்த வனப்பகுதியில் எடுக்கப்பட்டது. வெற்றிபெற்ற இந்த புகைப்படக் கலைஞருக்கு 4000 டொலர் மதிப்புள்ள கேமரா தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.