நாட்டின் வானிலை மாற்றம்!

இலங்கையின் வானிலையில் இன்று மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது

பிற இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.