மொத்தமாக 18 பேர்.. பிக்பாஸ் போட்டியாளர்களின் பெயர் பட்டியல்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன் களை கடந்து தற்போது 5வது சீசன் ஒளிபரப்பை துவங்கியுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுதும் இருக்கும் தமிழர்கள் ஆதரவு உண்டு.

100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு உணர்வுகளை நமக்கு கொடுக்கும் கோபம், அழுகை, அன்பு என்று அனைத்தையும் வெளிப்படுத்தும். இதில் பலருக்கு காதலும் அரும்பும். ஆனால் துரதிஷ்ட வசமாக இதில் காதலர்களாகும் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் பிரிந்து விடுவார்கள் என்பது எழுதப்படாத விதி.

இந்த நிலையில்தான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிக் பாஸ் சீசன் 5 குறித்த அறிவிப்புகள் வெளியானது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில் போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது நிலவரப்படி வீட்டிற்குள் மொத்தம் அபிஷேக் ராஜா, நடியா சாங், சின்ன பொண்ணு, சிபி, இசைவாணி, பிரியங்கா, ராஜூ ஜெயமோகன், நிரூப், சச்சின் மணி, இமான் அண்ணாச்சி, வருண், நமிதா மாரிமுத்து, வனேசா, பவானி, கௌசல்யா, நிழல்கள் ரவி, கதிரவன், பிரியாராமன் ஆகியோர் சென்றுள்ளனர்.