தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தல அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது ECR அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் வீட்டின் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளாராம்.
ஆனால், அவரை அதற்கு முன்பே தடுத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த பெண் நடிகர் அஜித்தை நான் பார்த்தே ஆகவேண்டும் என்று, பார்க்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், தனது சாவிற்கு நடிகர் அஜித் தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.