அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி உண்டு. ஆனால், வயிறு நிறைய சாப்பிட்டுவிடுவது அதன் பின் அதை எப்படி ஜீரணிக்க வைப்பது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என தேடிக் கொண்டிருப்பது நவீன யுகத்தில் பாக்ஷனாக மாரிவிட்டது.
முறையாக சாப்பிட்டால், நமக்கும் நலம், நம் உடல் நலமும் சீராக இருக்கும். அப்படி நாம் சாப்பிட்ட பின் உடனடியாக செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்ன என அறிந்துகொள்வோம்,
சாப்பிட்டவுடன், பலர் செய்யும் தவறு உடனடியாக தூங்குவது. அவ்வாறு தூங்குவது நம் உடல் நலத்திற்கு கேடு. எனவே சாப்பிட்ட பின்பு ஒரு பத்து நிமிடங்கள் வேகமாக நடக்காமல் சாதரணமாக நடந்து கொண்டோ அல்லது உட்கார்ந்தோ இருக்கலாம். சாப்பிட்ட பின்பு எத்தனை மணி நேரம் கழித்து தூங்கலாம் என்றால் ஒரு மணி நேரத்திற்கு பின் தூங்குவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதே போன்று சாப்பிட்ட பின்பு சிகரெட் பிடிப்பது, நீங்கள் சாப்பீட்ட உடன் சிகரெட் பிடிப்பது 10 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என சொல்லப்படுகின்றது. அதோடு முக்கியமாக சாப்பிட்ட உடனே குளிக்கக்கூடாது, சாப்பிட்ட பின்பு உடனே குளித்தால் செரிமான மண்டலம் பலவீனமாகி, செரிமான செயல்முறையில் இடையூறு ஏற்பட்டு, அதனால் உடல்நிலை சரியில்லாமல் போகும் நிலை வரலாம்.
அதேபோல உணவு உண்ட உடனேயே உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எப்போதுமே நம்மில் பலர் சாப்பிட்ட பின்பு தான் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர், அப்படி இல்லாமல் சாப்பிடுவதற்கு ஒரு பத்து நிமிடம் முன்பு ஏதேனும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பிட்டால், அது மிகவும் உடல் நலத்திற்கு நல்லது. அப்படி சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்துக்களும் நமது உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீரை குடிப்பதை விட, சுடு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. சுடு தண்ணீர் குடிப்பதன் மூலம், உணவு எளிதில் செரிமானமாவதோடு, உணவில் உள்ள சத்துக்களும் எளிமையாக உடலால் உறிஞ்சப்படும்.