நாட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்!

நாட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, முன்னணி சுகாதார சேவை குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்க சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி யுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைச் செலுத்த அரசாங்கம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளு மன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பதில் வழங்குகையில்,

நாம் 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெறவுள்ளோம். உலக சுகாதார ஸ்தாபனம் 65 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. எனினும் நாங்கள் 60 வயதுக்குட் பட்டோருக்கு அதனைச் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஹெகலிய தெரிவித்துள்ளார்.