இன்றைய காலத்தில் பலரும் மஜாஜ் செய்துகொள்வதனை விரும்புகின்றார்கள். ஏனெனில் உடலில் மசாஜ் செய்கையில் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது.
மசாஜ் செய்யும் போது நம் உடல் புத்துணர்வு அடைவதுடன் மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் தூண்டப்பட்டு உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் ரத்த ஓட்டமும் மேம்படும் என சொல்லப்படுகின்றது.
இதனால் தசைகளும் நெகிழும் என்பதுடன் பதற்றமும் குறையுமாம். அதுமட்டுமல்லாது உடல் வலியும் நீங்கும். பாதங்களில் சரியான புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யும்போது இதயம், நுரையீரல் என்பன பலப்படும்.
கழுத்து வலி, சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதேபோல பாதங்களில் மசாஜ் செய்யும் போது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் உடல் புத்துணர்வடையும்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்ததை சரிசெய்ய காலின் கட்டை விரலை அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். கால் விரல்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் தலைவலி குறைவதை உணர்வீர்கள்.
கால்களில் எண்ணற்ற நரம்பு முடிச்சுகள் உள்ளன. அவை முதுகுத்தண்டுவடத்துடன் தொடர்புடையவை. வட்ட இயக்கத்தில் விரல்களை அழுத்தி தேய்த்து 30-45 விநாடிகள் பாதத்தில் மசாஜ் செய்தால், முதுகு தண்டுவடத்தில் புத்துணர்ச்சி பரவும்.
அதேபோல சோம்பல், தசை பலவீனம், உற்சாகமின்மையால் அவதிப்படுகிறவர்கள் பாத மசாஜ் செய்தால் உற்சாகத்துடன் செயல்படலாம்.
அதுமட்டுமல்லாது கழுத்து மற்றும் தோள்களில் ஏற்படும் வலி, தலையின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் ஏற்படும் வலிகளை போக்கவும் பாத மசாஜ் துணைபுரியும்.
கால் விரல்களின் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம் எனவும் கூறப்படுகின்றது.