மின் கட்டண நிலுவையைச் செலுத்த சலுகைக் காலம் அறிவிப்பு… வெளியான தகவல்!

நிலுவையிலுள்ள தமது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட சலுகைக் காலத்தை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

“இந்த இரண்டு மாதங்களுக்கு நிலுவையில் உள்ள 44 பில்லியன் ரூபாவை நாங்கள் அறவிட வேண்டியுள்ளது. எனினும், நிலுவை தொகையை செலுத்தவுள்ள பாவனையாளர்கள் அதனை 12 மாதங்களில் செலுத்த வாய்ப்பளித்துள்ளோம்.

ஆனால் அந்த மாதத்திற்கான கட்டணத்துடன் அதனை செலுத்த வேண்டும். கட்டணப் பட்டியலில் நிலுவை வைத்திருப்போர் 12 மாதங்களுக்குள் செலுத்தலாம் என்றும் இறுதிப் பட்டியல் அக்காலத்தினுள் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.