தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவரது படங்கள் என்று தனியாகவே தெரியும்.
அவரது இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களுக்கு ஆசையும் உள்ளது, அடுத்து என்ன மாதிரி படம் இயக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.
அவர் இயக்கிய படங்களில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஒரு படம் அவன்-இவன். இந்த படத்திற்காக விஷால் கண் கருவை மையத்தில் வைத்து நடித்து நிறைய கஷ்டப்பட்டார், ஆனால் அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
படம் குறித்து என்ன தகவல் என்றால் படத்தில் விஷாலுக்கு பெண் வேடத்திற்கு டப்பிங் கொடுத்தது ஒரு சீரியல் நடிகையாம். அவர் வேறுயாரும் இல்லை, பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடிக்கும் செந்தில் குமாரி தான் டப்பிங் பேசியிருக்கிறாராம்.
இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.