சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் அண்ணாத்த.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.
மேலும் சமீபத்தில் மறைந்த பாடகர் SPB குரலில் ரஜினிக்காக அவர் பாடியுள்ள “அண்ணாத்த அண்ணாத்த” பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வந்தது.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 10 நாட்களுக்குள் வெளியாக இருப்பதாகவும், படக்குழு ஆயுதபூஜை விடுமுறை தினங்களில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.