பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது முதல் தங்களது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை பற்றி போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள்.
அப்படி இன்று காலை வந்த புரொமோவில் பவானி ரெட்டி தனது கணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து மனம் உறுதி பேசுகிறார்.
கணவர் இறந்த தாக்கத்தில் இருந்து அவர் இன்னமும் வெளியே வரவில்லை என்பது மட்டும் அவர் பேசுவதில் இருந்து நன்றாக தெரிகிறது. என் கணவர் இறந்த போது எனக்கு கோபம் தான் வந்தது.
அவ்வளவு கனவு கண்டோம், குழந்தை போல் பார்த்துக் கொண்டார். என் வாழ்க்கையில் தான் எப்போதும் தனியாகவே இருக்க வேண்டும் என எழுதியிருக்கிறதோ எனக்கு தெரியவில்லை என கண் கலங்கி பேசுகிறார்.