சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்திய மற்றுமொரு நிறுவனம்… வெளியான தகவல்!

நாட்டில் நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் கொள்கலன் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மற்றுமொரு நிறுவனமான லாப்ஸ் நிறுவனமானது அதன் சமையல் எரிபொருள் விலையையும் உயர்த்தி அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ சமையல் எரிவாயுவானது 984 ரூபா உயர்ந்து 2,840 ரூபாவாகவும், 5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 393 ரூபா உயர்ந்து 1,136 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.