வவுனியாவில் 6 ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தியதுடன், தாய் மற்றும் மகன் புதைக்கப்பட்ட வவுனியாவிலுள்ள முருகனூர் பகுதியில் பால் வார்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாயார் சயிந்திகாவும், அவரது மகனான பொபிஷணனும் கடந்த 2015.08.09 அன்று யாழில் உள்ள தாயார் வீட்டிலிருந்து வவுனியாவில் உள்ள கணவரது வீட்டிற்கு அவருடன் சென்றுள்ள நிலையில் அன்றைய தினமே இருவரும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர்.
பின்னர் சம்பவத்தில் தொடர்பில் கணவனை ஆறு வருடங்களுக்கு பின்னர் கடந்த 2021.08.07 அன்று வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சயிந்திகாவின் கணவனிடம் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது தாயையும்- குழந்தையும் தானே கொலை செய்து புதைத்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய சயிந்திகாவின் பெற்றோரும், யாழ்.கோண்டாவில் வாழ்.உறவினர்களும் பால்வார்த்து கண்ணீர் அஞ்சலி செல்லுத்தியுள்ளனர்.