அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்…

அண்ணாத்த டீசர் அக்டோபரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்பட்டத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் என படக்குழு அறிவித்திருந்ததை அடுத்து இந்த படத்தின் டீசர் அக்டோபர் 14 தேதி வெளிவரும் என இதன் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இந்த படத்தின் அண்ணாத்த பேசுனா ஸ்டைலு மற்றும் சாரல் காற்றே’ பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடேயே பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடதக்கது.