பிக்பாஸ் ஹிந்தி சீசன் தற்போது 14 சீசன்களை கடந்து 15வது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் வாங்குகின்ற சம்பளம் ஒரு படத்திற்காக நடிகர்கள் வாங்கும் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகம் என்று சமீபத்தில் சர்ச்சை உருவானது.
தமிழ் பிக் பாஸ் போலவே இந்த நிகழ்ச்சியிலும் சண்டை சச்சரவுகள் மிக அதிகமாக இருக்கும். போட்டியாளர்களுக்கு இடையே கடந்த வாரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் செய்துள்ளனர். இது பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது நடிகை விதி பாண்டியா பாத்ரூமில் குளித்துக் கொண்டு இருக்கையில் பிரபல நடிகர் பிரதிக் அந்த பாத்ரூமில் கதவினை உடைத்துள்ளார். இதற்கு அந்த நடிகை ஏன் கதவை உடைத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் மிகவும் கூலாக விளையாட்டுக்குத்தான் உடைத்தேன் என்று பதிலளித்து விட்டார்.
இந்த நிலையில் இந்த வார இறுதியில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த சல்மான் கான் இது குறித்து அவரை கடுமையாக கண்டித்தார். அத்துடன் உங்கள் சகோதரி அல்லது அம்மா உள்ளே இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பீர்களா என்று கோபமாக பேசி இருக்கிறார். பிரதிக்கின் இந்த செயல் அனைவரையும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.