முதுகு வலியில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்

முதுகுவலியில் அவதிப்படுபவர்கள் அந்த வலியில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வழிமுறைகளை பின்பற்றினால் போதும். முதுகு வலி வராமல் தடுக்கலாம்.

இன்று.. பொதுவாக பெரும்பாலானோர் உட்கார்ந்த இடத்திலேயே 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் முதுகுவலியில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. முதுகு வலியில் இருந்து விடுபட 10 வழிகளை பின்பற்றினால் போதும்:-

1. தினம் 21 முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

4. சுருண்டு படுக்காதீர்கள்.

5. கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள்.

6. தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

7. 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

8. இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

10. காலை 20 முறை, மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

இதை கடைபிடித்தால் முதுகுவலியில் இருந்து நிவாரணம் அடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்