உப்புமாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

உப்புமாவை எளிதாக தயாரிக்க முடியும், பலர் இதனை விரும்பி சாப்பிட்டாலும், பலருக்கும் இந்த உணவை பார்த்தாலே அலர்ஜி தான்!

ஆனால் உப்புமாவில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

செரிமானம்

நமது உடலானது இந்த கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் ரவை உப்புமாவை மெதுவாக செரிமானம் செய்கிறது. இதனால் நமக்கு வெகு எளிதாக பசி எடுப்பதில்லை. இதன் காரணமாக அந்த நேரங்களில் நொறுக்குத் தீனி போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தேடிச் செல்ல வேண்டியதில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி

ரவையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. குறிப்பாக இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி புரிகின்றது.

சிறுநீரகம் மற்றும் இதயம்

ரவையில் நிரம்பியுள்ள பொட்டாசியம், நமது சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கிறது. இது நமது சிறுநீரகத்தில் உள்ள செயல்பாட்டை விரிவாக்குகிறது. இந்த ரவை உப்புமாவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை.

எலும்புகள்

உப்புமாவில் இருக்கும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள், நமது உடலின் நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

இரும்புச்சத்துக்கள்

உப்புமா வில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால், ரத்த சோகை போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது நமது உடலில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது.