குறைந்த விலையில் புதிய 5ஜி Smartphone

சாம்சங் கேலக்ஸி A13 5G ஸ்மார்ட் போனின் விலை, சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான A சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், வருகிற 2022 தொடக்கத்தில் ஒரு புதிய நுழைவு நிலை மொடலை பெறும். அது சாம்சங் கேலக்ஸி A13 5G ஆகும்.

வரவிருக்கும் குறைந்த விலை 5 ஜி சாம்சங் ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டாஃபர் வழியாக சில சாம்சங் கேலக்ஸி ஏ 13 5 ஜி ரெண்டர்கள் லீக் செய்யப்பட்டுள்ளது.

அதன் வழியாக இது வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் பலவற்றை வெளிப்படுத்துகிறது. உடன் சில முக்கிய அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட்போனின் சாத்தியமான விலையை பற்றிய ஐடியாவையும் நமக்கு வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி A13 5G ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், வாட்டர் டிராப் இன்பினிட்டி-வி டிஸ்ப்ளே உள்ளது.

மேலும் ஸ்மார்ட்போனில் பிளாஸ்டிக் ஃப்ரேம் மற்றும் பேக் பேனலை காண முடிகிறது. பின்புற பேனலில் செங்குத்தாக அடுக்கப்பட்ட மூன்று கேமரா அமைப்பு உள்ளது. அந்த கேமரா அமைப்பில் வைட் ஆங்கிள் லென்ஸ் இடம்பெறும்.

சாம்சங் கேலக்ஸி ஏ 13 5 ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும். சில மாதங்களில் OTA வழியாக வரும் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை பெறும், அதுவரை ஆண்ட்ராய்டு 11 கொண்டு இயங்கும்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது யூ.எஸ்.பி டைப் சி 2.0 மூலம் 25W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

இந்த போன் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருக்கும், அதாவது 8.9 மிமீ தடிமன் (10 மிமீ தடிமன் உயர்த்தப்பட்ட கேமரா லென்ஸ் உட்பட) இருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50MP மெயின் கேமரா சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு இருக்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கும், சுற்றிலும் பிளாஸ்டிக் ஃப்ரேம் உடன் இருக்கும்.

அமெரிக்கா மற்றும் கனடா பிராந்தியங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ 13 5 ஜி ஸ்மார்ட்போன் வருகிற 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.21,000 – ரூ.22,000 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்னும் மலிவான விலையை நாம் எதிர்பார்க்கலாம்.