உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு.
சுக்குவில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பலரும் இதனை சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்த மட்டும் தான் பயன்படுத்துவார்கள்.
ஆனால் இந்த சுக்கு பொடியைக் கொண்டு வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதிலும் இதன் பொடியை பாலில் கலந்து இரவில் குடிப்பதனால் இன்னும் நல்ல ஆரோக்கியப்பலன்களை தருகின்றது.தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம்? இதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
எப்படி தயாரிக்கலாம்?
சுக்கு பால் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் சுக்கு தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும் வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.
நன்மைகள்
சுக்கு பொடியை பாலில் போட்டு குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் தொண்டை புண் மாயமாய் மறையும். மேலும் சுக்கு தொற்றுநோயைக் குறைப்பதில் மிகச்சிறந்த பொருள்.
உங்களுக்கு உணவு உண்ட பின் வயிறு உப்புசமாக இருந்தால், அதிலிருந்து விடுபட சுக்கு பொடியை பாலில் போட்டு குடியுங்கள்.
சுக்கு பாலைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதுவும் சுக்கு பாலில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அதன் சத்து இன்னும் அதிகரித்து, உடலுக்கு இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும்.
உங்களுக்கு தொடர்ந்து விக்கலுக்கு சுக்கை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஓரளவு குளிர்ந்ததும் குடிக்க வேண்டும்.
சுக்கு வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றை எதிர்க்கும் அளவில் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதற்கு தினமும் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.
சுக்குவை பாலில் போட்டு குடிப்பதால், அது மூட்டு வலி மற்றும் கீல்வாதம்/ஆர்த்ரிடிஸ் போன்றவற்றில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் சுக்கு பால் குடிக்க வேண்டும்.
குறிப்பு
சுக்குவை அதிகமாக உட்கொண்டால், அது வயிற்று பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.
சுக்கை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தால், அது நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும்.
சுக்கு சிலருக்கு சில நேரங்களில் வாயில் எரிச்சலை ஏற்படுத்தும்.