கோட்டாபயவிடம் நேரடியாக இளம் வயது பிக்கு ஒருவர் கேட்ட விடயம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa ) ருவன்வெலிசாயவுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அப்போது இளம் வயது பிக்கு ஒருவரை அவரிடம் உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

நேற்று (13) மாலை ருவன் செலியவை வழிபட ஜனாதிபதி கோட்டாபய சென்றுள்ளார்.

அப்போது இளம் வயது பிக்கு ஒருவரை ஜானதிபதி சந்தித்துள்ளார். குறித்த இளம் வயது பிக்கு ‘ஜனாதிபதி அவர்களே, ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதாக கூறினீர்களே அதனை நாம் மிகவும் எதிர்ப்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இளம் வயது பிக்குவிடம் இந்த வருட இறுதிக்குள் அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். அத்தோடு – அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும், அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன் எனவும் இதன்போது இளம் வயது பிக்குவிடம் தெரிவித்தார்.