யாழ்.ஏழாலையில் பொலிஸாரிடமிருந்து தப்பி சென்ற இரண்டு ரவுடிகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸாரால் ஒருவரை கைது செய்யப்பட்டதுடன் மற்றொரு நபர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் இருவரும் எதிர்வரும் வெள்ளிகிழமைகளில் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஏமாலையில் அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை பொதுமக்கள் பொலிஸாரிடம் பிடித்து கொடுத்த போது அவர்கள் வேண்டுமென்றே ரவுடிகளை தப்பிக்க விட்டதாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கடந்த 8ம் திகதிமுன்னிலையாகி விளக்கமளிக்குமாறு, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை அப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.