கொரோனா அபாயம் காரணமாக வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம் என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
யாழில் கொரோனா பரவல் அபாயம் தற்போது ஓரளவு குறைவடைந்து வரும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வழக்குத் திரும்பி கொண்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் கொரோனா விடுதிகளில் நாளாந்தம் 30 க்குக் குறைவான நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதேவேளை, கொரோனா பரவல் அபாய நிலைமை காரணமாக வைத்தியசாலைக்கு செல்லாத சாதாரண நோயாளர்கள் மற்றும் நோய்களுக்காக மருந்துகளைப் பெற்றுக் கொண்டிருப்போர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைகளைப் பெற முடியும் என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.