மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
தொண்டர்களை சந்திப்பேன் என்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து எனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன் என்றும் சசிகலா தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார்.
சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு புறப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
ஆதரவாளர்கள் புடை சூழ சசிகலா எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் கண் கலங்கிய நிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா பயன்படுத்திய வாகனத்தில் அதிமுக கொடியுடன் மெரினா கடற்கரைக்கு சசிகலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.