கொரோனா வாரசின் புதிய திரினது நாட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் பரவலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
நாடு சுற்றளபயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி துறைமுகங்களுக்கு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக புதிய திரிபு நாட்டிற்குள் வரும் அபாயம் உள்ளது.
இதனை எந்த வகையிலும் கணிக்க முடியாது. மக்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டாலும் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகும். தோற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்ததன் பிறகான பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமாயின் அனைவரு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.
அதேவேளை, நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்தது 67 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். 58 வீதமானோர் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அனால் இவை 70 முதல் 80 சதவீத மொத்த மக்கள் தொகையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.