நாட்டின் மக்கள் டிசம்பர் இறுதி வரையில் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கூறியதாவது, நாட்டில் தினமும் சுமார் 700 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றன. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலைகளை மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது அனைவர்க்கும் நல்லதாகும்.
இது உறவினர்களை பார்ப்பதற்கோ, உல்லாச பயணம் மேற்கொள்ளவோ உகந்த கலகட்டமல்ல. ஆகையால் வருகிற டிசம்பர் இறுதி வரையில் மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.