யாழ்ப்பாணத்தில் திடீரென மயக்கமுற்று இரண்டு மாத சிசு உயிரிழப்பு….

வட்டுகோட்டை – அராலி பகுதியில் பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசுவொன்று திடீரென்று மயக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வட்டுகோட்டை – அராலி தெற்கைச் சேர்ந்த சிசு இன்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்த பின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது.

இதன்போது சிசுவை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி சிசு உயிரிழந்துள்ளதாக இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.