இலங்கைக்குள் புதிய கோவிட் வகைகள் நுழையும் அபாயம்!

இலங்கைக்குள் புதிய கோவிட் தொற்று வகைகள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படுவதாலும், துறைமுகங்கள் மீண்டும் செயல்படுவதாலும், புதிய கோவிட் வகைகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குனவர்தன (Asela Gunawardena) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே,இவ்வாறான சந்தர்ப்பத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.