கருப்பு வெள்ளையில் கூட மார்க்கமாக போஸ் கொடுத்த அம்மு அபிராமி…!

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’. குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

வந்தவர், சும்மா இல்லாமல், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். . தற்போது கருப்பு வெள்ளை படத்தில் பழைய காலத்து நடிகை போல போஸ் கொடுத்துள்ளார்.