பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிஷேக் மதுமிதா விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ரூட் போடுகிறாரா என கேட்டு வருகின்றனர்.
இலங்கை தமிழரான மதுமிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜெர்மனியில்தான்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் மதுமிதா. ஆங்கிலத்தையும் இலங்கை தமிழையும் கலந்து கட்டி பேசி வரும் மதுமிதாவின் மொழி பலருக்கு புரியவில்லை என ஹவுஸ்மேட்டுகளே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மதுமிதாவிடம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார் அபிஷேக். முதலில் பாவனியை அழகாக இருக்கிறாய் என ஜொள்ளுவிட்டார் அபிஷேக். தற்போது மதுமிதா பக்கம் தாவியுள்ளார் அபிஷேக்.
நேற்றைய எபிசோடில் பாத்ரூம் ஏரியாவில் நின்று மதுவிடம் பேசிய அபிஷேக், உனக்கு எதிராக என்னால் விளையாட முடியாது.
நான் வேற லெவலில் உன்னோடு கனெக்ட் ஆகி விட்டேன் என்றார். மேலும் மதுமிதாவை கேப்டன் ஆக்கி அவரை யார் என்று இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் காட்டுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு தெரிகிறார் அபிஷேக்.
இதனை பார்த்த ரசிகர்கள் இது அபிஷேக்கின் கேம் பிளானா அல்லது அபிஷேக் மதுமிதாவுக்கு ரூட் போடுகிறாரா என கேட்டு வருகின்றனர். மேலும் பலர் அபிஷேக்கிற்கு ஜெர்மனிக்கு போக ஆசை வந்துவிட்டது போல என கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் மற்றும் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
இதில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரிகிறது. இரண்டாவது ப்ரோமோவில் இசைவானியை சிரிக்க வைக்க அவரை அசிங்கப்படுத்துவது போல போட்டியாளர்கள் கலாய்த்ததை அண்ணாச்சி எதிர்த்து கேட்கின்றார்.
இரண்டு ப்ரோமக்களையும் பார்க்ககும் போது இன்று தரமான சம்பவம் இருக்கின்றது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.