சுந்தர் சி படம் என்றாலே செம ஜாலியாக இருக்கும். அப்படி அவரது இயக்கத்திலும், நடிப்பிலும் அண்மையில் வெளியான திரைப்படம் தான் அரண்மனை 3.
இதில் ஆர்யா, ராஷி கண்ணா என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள். சார்பட்டா பரம்பரை பிறகு ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அன்றாடம் இப்படத்தின் வசூல் குறித்த நிலவரமும் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது வரை படம் தமிழ்நாட்டில் ரூ. 15.9 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் பெரிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை என்பதால் இப்படத்திற்கான வசூல் அதிகமாகும் என கணிக்கப்படுகிறது.