நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று (20) புதன்கிழமை பிற்பகல் வெல்லவாய – எல்லவல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும், அவரது பிள்ளைகள் இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 38 வயதான தந்தை, 15 வயதான மகன் மற்றும் 11 வயதான மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.