தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை அதன்பின்னர் அவர் தெலுங்கில் நடித்து பிரபல நடிகையானார்.
இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகின்றன.
View this post on Instagram
இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ரோஜா இதழை தன்னுடைய இதழுடன் வைத்துக்கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.