தமிழ் சினிமாவில் 90களில் பல படங்களில் மிகவும் வெயிட்டான வில்லன் வேடங்கள் நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிற்பவர் நடிகர் மன்சூர் அலி கான்.
நாட்டு பிரச்சனைகளை குறித்து எப்போதும் தைரியமாக பேசக்கூடியவர், அதேசமயம் அதனால் பெரிய பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார்.
தற்போது சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அரசு புறம்போக்கு நிலம் 2500 சதுர அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் இப்படியொரு நடவடிக்கை என கூறப்படுகிறது.