நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியான படம் டாக்டர்.
இப்படத்தில் இவருடன் இணைந்து பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படம் ரிலீசான நாள் முதல் தற்போது வரை சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது.
விரமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றி என்று தகவலும் வெளியாகிவிட்டது.
இந்நிலையில் தற்போது வரை, உலகம்முழுவதும் சுமார் ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்த மாபெரும் சாதனையை படைத்துள்ளது டாக்டர் படம்.
மேலும், விரைவில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்று தெரிவிக்கின்றனர். அப்படி நடந்தால், இதுவே முதல் ரூ. 100 கோடி படமாக சிவகார்த்திகேயனுக்கு அமையும்.