கார்த்திக் நரேன் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடித்திருக்கும் படம் மாறன்.
இப்படத்தில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் தான் இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது.
இந்நிலையில் தனுஷின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மாறன் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்கள் அப்செட் செய்தது குறிப்பிடத்தக்கது.