அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை அவரது ஞானதந்தையான 61 வயது நபர் திருமணம் செய்து கொண்டது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
ப்ளோரிடாவை சேர்ந்தவர் மைக் ஹவுகாபுக் (61). இவருக்கும் 18 வயதான தேஜா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது, இதற்கு அவர்களின் வயது வித்தியாசம் மற்றும் காரணமில்லை, முக்கியமாக மைக், தேஜாவின் ஞானத்தந்தை (Goddaughter) ஆவார்.
இந்த நிலையில் பேஸ்புக்கில் இருந்து தானும், தனது மனைவியும் விலகுவதாக மைக் அறிவித்துள்ளார். ஏனெனில் தொடர்ந்து தங்களை பற்றி அவதூறாக பலரும் விமர்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளனர்.
இதோடு பெண்கள் பலரும் தன் மனைவியை பார்த்து பொறாமைப்படுவதாகவும் அதன் காரணமாக பேஸ்புக்கில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் தன்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தேஜா கூறுகையில், நான் யாரை பற்றியும் கவலைப்படவில்லை, இது என்னுடைய வாழ்க்கை, நாங்கள் முழுமையான வாழ்வை வாழ்வோம் என கூறியுள்ளார்.