பசில் போன்று முகமூடி அணிந்து வந்த நபருக்கு ஏற்ப்பட்ட கதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் உரப் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டங்கள் தம்புள்ளை, படகிரிய, ஹப்புத்தளை, மீரிகம, மெடதும்பர உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்றன.

தம்புள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை (Basil RajaPaksa) போல் உடை மற்றும் முகமூடி அணிந்து வாகனத்தில் இருந்து இறங்கிய நபரை போராட்டக்காரர்கள் அடித்து விரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்த (Mahinda Rajapaksa) போன்று முகமூடி அணிந்த இருவர் சவப்பெட்டியை வைத்திருக்கும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.