கடலைக்குள் இத்தனை விஷயம் இருக்குதா.?!

உண்ணும் உணவின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதன் பயன்களை அறிந்து உண்ணுவது அவசியம்.

நியூயார்க்கில் உள்ள எம்போசா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு நடத்தியது. உணவு பழக்கம் பற்றியும் அந்த உணவு தரும் பயன்கள் பற்றியும் மேற்கொண்ட ஆய்வு அது. அதில் வேர்க்கடலை அதிகம் நோய் எதிர்ப்புசக்தி கொண்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

‘ஏழைகளின் புரதம்” என்றழைக்கப்படும் கடலையானது 30 விதமான ஊட்டச்சத்துக்களை கொண்டது. அவை அனைத்தும் உடலுக்கு பல்வேறு வகையான பலன்களை தரக்கூடியது.

இதில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை வேகப்படுத்தும். எனவே, சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.

மேலும், இதில் நைட்ரிக் அமிலம் இருப்பதால் உடலில் உருவாகும் நைட்ரேட் இரத்தக்குழாயை விரிவடைய செய்யும். எனவே, இரத்த அழுத்தம் குறையும்.

மலச்சிக்கலை குணப்படுத்தும். நல்ல கொழுப்புகளை கொண்ட கடலை வைட்டமின் A, B3, போலிக் ஆசிட் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

இது கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தவை. இதில் உள்ள நியாசின் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. இது நரம்பு மண்டல நோய்க்கு சிறந்த நிவாரணியாக பயன் தருகிறது.

இதில் கால்சியம், வைட்டமின் D உள்ளதால் எலும்பு, பல் வளர்ச்சிக்கு நல்லது.