பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனவா இது.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது.

கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் மிகவும் சோகக் காட்சிகளை உள்ளடக்கியதாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் அண்ணன் தம்பிகளின் அம்மாவான லட்சுமி இறந்துவிட்டார்.

இறுதிவரை கண்ணனால் அவருடைய அம்மாவை காண முடியாமல் செல்கிறது.ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகுவது வருத்தமளிப்பதாக நடிகை ஷீலா தெரிவித்திருந்தார்.

இத்தகைய நிலையில் இதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக புடவை கட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.