நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துமுடித்துள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வைரலானது.
தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது காட்மண்டுர் பகுதியில் பைக்கில் பயணம் சென்றபோது ஓய்வு எடுத்துள்ளார். அப்போது மிகவும் களைப்புடன் கையில் தண்ணீர் பாட்டிலில் வைத்துக் கொண்டு அவர் தரையில் அமர்ந்து உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#AjithKumar pic.twitter.com/4ws8MEQbxh
— Senthilraja R (@SenthilraajaR) October 24, 2021