பெரிய வெங்காய விலை அதிகரிப்பு!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ பி ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பெரிய வெங்காய செய்கையில் ஈடுபட்டு வரும் மாத்தளை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் வெங்காயத்தை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். 120 முதல் 140 வரை ஒரு கிலோ வெங்காயம் பொருளாதார மத்திய நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது. பெரிய வெங்காய செய்கையில் மாத்தளை மாவட்ட விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வெங்காய செய்கையில் சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதோடு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.