அடையாள அட்டை பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி…

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக நாள் மற்றும் நேரம் ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரிகளுக்காக சேவை வழங்கப்படும் என வியான குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் காலி தென் மாகாண அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

தற்போது, ​​பொதுச் சேவைகளின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு எண்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும் உரிய திகதியில் திணைத்தளத்திற்கு வந்து தங்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெறலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.