ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன்(Gotapaya Rajapaksa) ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு, உரப் பிரச்சினை, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் நேற்றைய தினம் விரிவாகப் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் இன்றைய தினம் கடமைக்குத் திரும்புவார்கள் எனவும் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் மற்றும் உரப்பிரச்சினைக்கு கிரமமாகத் தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் நிலையம் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.