இரு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிக்கிரி குளத்தில் இருந்த தாமரை மலரைப் பறிக்கச் சென்ற பெண்ணும் அவரது உறவினரான சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் வெலிஓயா, மெனரவௌ கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் கம்பொல தொரஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான எஸ்.ஏ. தனந்தனி மற்றும் அவரது மூத்த சகோதரியின் மகளான 12 வயதான உபேக்ஸா சமோதி என்ற சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.சம்பவம் குறித்து தெரியவருவது,

வெலிஓயா, மெனரவௌ கிராமத்தில் உள்ள குளத்தில் தாமரை மலர்களைப் பறித்துக்கொண்டு கரை திரும்பிய இவர்கள் கால்களைக் கழுவுவதற்காகக் குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்ட இடத்திற்குச் சென்ற போதே நீர்ல் மூழ்கி உயிரிழந்ததாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.