பிக்பாஸ் அனிதா சம்பத்க்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்புகளை பெற்று வருகின்றன. அந்த வகையில் மக்கள் மனதில் நல்ல வரவேற்புகளை பெற்று சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். மேலும் இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது சீசன் 5 நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4-யில் போட்டியாளராகப் பங்கு கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனிதா சம்பத். இவர் இதற்கு முதல் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர்.

மேலும் இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சில சர்ச்சைகளிலும் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பிபி ஜோடிகளில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி, வெற்றி பெற்று டைட்டில் வின்னர் ஆனார்.


இதேவேளை அனிதா சம்பத் திரையுலகில் முன்னணி நடிகரான சத்தியராஜ் உடன் சேரந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தது,

மேலும் தனது அடுத்த படம் இந்த இரண்டு அன்பர்களுடன் படப்படிப்பு நடந்து கொண்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார். இவர் நடிக்கும் படத்தில் சத்தியராஜ், மீனா என பல நடிகர்கள் நடித்து வருவது இவர் வெளியிட்ட பதிவில் தெரியவந்துள்ளது. இது எந்தப்படம் என்று இன்னும் தகவல் வரவில்லை.பெரும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.